Saturday, December 29, 2012

no prayer for my grief,,

no prayer for my grief.
&
o god !
this is no prayer for my grief
but one for those unfortunate souls
who shun the joys YOU have scattered
everywhere around profusely on earth-
not because of their own folly
or selfish searches of futile prospects
but of a nagging mental deficiency -
lost in their lonely world of gloom and pain
words forsaking ,thoughts numbing and life stagnating!
let freshness blow about them
and joy visit their hearts
the cheer of the world stir their cells
the songs of the sun unfurl their folded souls
and the eyes speak of their liberated life!
let me wash your feet with all my tears
no more strength have i
to suffer their voiceless pain
and i die each moment each day amidst their plight
and feel guilty to enjoy your endless gifts
leaving them forlorn on the highways of life .
or teach me the ways to bring them back on their rails!
it is like serving delicacies ,keeping them tied
or granting them eyes but depriving the vision -
scriptures shout 'YOU ARE MERCIFUL !'
MAY YOU PROVE THE SCRIPTURES RIGHT .
--s.chandra kalaadhar
29.12.2012 /saturday /9 p.m.

Saturday, December 8, 2012

அவளை உனக்கு மிக நன்றாகவே தெரியும்
அவள் உன்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கிறாள்
நீயோ சுற்றும் முற்றும் பார்க்கிறாய்
நாலுபேர் பார்ப்பதுபோல் தோன்றுகிறது
அவள் புன்னகையை மிதித்துச் செல்கிறாய்
இதுதானே அவளது உலகம் --
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
அவள் மீது தான் எத்தனை போர்வைகள் ?
இளக்காரம் ,அருவருப்பு ,அலட்சியம் ,
மதிப்புத் தாழல் ,கண்ணியக் குறைவு
இன்னும் எத்தனை எத்தனையோ போர்த்திவிட்டு
அவளை மூச்சடைக்க மூடி விட்டோமே !
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
தனக்குள் தான் புதைந்து கிடக்கிறாள்
தன் தனி உலகில் முகமின்றி வாடுகிறாள்-
என்ன பேசினாலும் அவளுக்கு எல்லாம்
அவளே கேள்வி அவளே பதில் !
ஆண்டாண்டாய் அவள் சிந்திக்கின்றாள்
தன்னோடு கூட மற்றெவரும் புரியவில்லை -
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
பாச பந்தங்கள் இராப்பகலாய்த் தேடுகிறாள்
கொச்சை மொழிகளே குறைவின்றிப் பெறுகிறாள்
கண்களில் சலிப்பு விழிகளில் நெருப்பு
எற்றுவது போன்று பார்வையின் உதைப்புகள்
கொஞ்சும் மொழி ஒன்றுக்காய் குப்பை கிளறுகிறாள்
தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள்
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
விரக்திக் கடலுள் வீழ்ந்து விட்டாள்
கடல் பார்த்து கரை சேர்த்தால் உண்டு
படைத்தோனும் கண் இறக்க மறந்து விட்டான்
பெற்றவையும் கற்றுவிட்ட பாவத்தால்
காத தூரம் காணாது ஒதுங்கியே போயின--
இதுவும் கூட அவள் சிரிப்பில் அடக்கம்
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
புறத்தில் அமைதிப் பசிபிக் மாக்கடலாய்
அகத்தில் அட்லாண்டிக் சுழல் கொந்தளிப்பாய் -
அவள் மௌன முக முகட்டில்
சூழ்ந்திருக்கும் பொதி மேகங்கள் கீழ்
கொதித்திருக்கும் செந்தீக் குழம்புகள்
என்று பீறிடும் யார்தான் அறிவார் ?
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
கருணை எங்கே கனிவாய் கனிகிறது ?
சொற்கள் எங்கே அமுதாய் நனைக்கிறது ?
செவிகள் எங்கே விண்ணாய் விரிகிறது ?
தொடுகை எங்கே இதமாய் அணைக்கிறது ?
வாழ்க்கை முழுதும் தேடுதற்கன்றோ
இருந்தும் இல்லாத உறவுகள் கொடுத்தான் ?
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
அவள் வாழ்ந்து கெட்டது போதும் போதும்
இறைவா அவளை அழைத்துக் கொண்டுவிடு
சுகம் எனும் கீற்றைக் காணாத ஜீவன்
மனத்தில் மிதிகளே நிறைத்திருக்கும் ஆன்மா
இன்னுமும் உடல் வலிகள் வேண்டவே வேண்டா
உயிரின் சித்திரவதை போதும் போதும்
அமைதியில் அவள் உயிர் அடங்கிப் போகட்டும்
தென்றலின் இழையாய்க் கலந்து செல்லட்டும் !
 
----சந்திர கலாதர்
08.12.2012 / சனி / கார்த்திகை 23
மாலை மணி 6
S.CHANDRA KALAADHAR

Thursday, December 6, 2012

கார்த்திகையின் அடை மழை ...
அடை அடையாய் , தேனடையாய்க் கார் மேகங்கள் !
வானம் ஒரு தனி வசீகரம் !
காற்றில் ஓர் ஈரிப்பு ;
ஒளியில் ஒரு சுகமான இருட்டு !
இயக்கம்.. இயக்கம்.. ஓயாத இயக்கம் வான் வெளியில் !
எங்கிருந்து ,..எது நோக்கி ,..எதனால் ,..எப்படி ?
கேள்விகளால் மனம் வானம்போல் !
நாட்கள் வேகமாக மேகங்களாய் நகர்ந்து விட்டன -
மழை விடைபெறும் நாள் இதோ இதோ வருகிறது -
மனம் கனக்கிறது ;
இத்தனை நாட்களாய் இந்தப் பாச உறவு !
இந்தப் பார்வை உறவு
மௌனங்களில் மாலைகளில் உறவாடிக்கொண்டு !
ஓராண்டு காத்திருக்க வேண்டும் பொறுமையாய்
இச்சூல்கொண்ட நிறைமாத கார்முகங்கள் காண்பதற்கு !
வானின் ஆப்பரிக்க திருவிழாவிற்கு!
இரவின் நிசப்தத்தில் தனிமையாய்
'சோ ' விடும் நாதங்கள் கேட்பதற்கு !
ஒளிச் சிமிட்டல்கள் பார்ப்பதற்கு !
இடையறாத் தாழ் உறுமல்கள் இசைவதற்கு !
குடைகள் பூப்பதற்கு--
ஓடி ஒளிவதற்கு -
வீதி எல்லாம் நீர்ப் பூக்கள் சிரிப்பதற்கு !
வானின் பட்டு நெசவுக்கு !
நிலமெங்கும் முகம் பார்க்கும் கண்ணாடியாய்
பசுமையின் மழலைகள் ஆடித் திரிவதற்கு !
நீர்ப் பறவைச் சிங்கார அணிவகுப்பிற்கு !
ஏரிகளின் பருவ விம்முதற்கு !
ஆம் ..கார்காலம்
நெஞ்ச ஏரி கனக்கிறது !
---சந்திர கலாதர்
06.12. 2012 / வியாழன் /கார்த்திகை 21
மாலை 6 மணி
S..CHANDRA KALAADHAR

Friday, May 11, 2012

நம்பிக்கைகளில் நனைந்து கிடப்பதால்
புனிதமாய்ப் புரண்டோடி வந்த கங்கையே
உன்னை அறியாமைக் கழிவுகளால்
புண்ணாக்கிப் புழுவாக்கி நாறடித்தோம்--
ஒளியாகி ஓங்கார ஒலியாகி இசையாகி
பசுமை விரிக்கப் பரந்த உன்னை
நோய் நிழலாக்கி ஊன் சாம்பலாக்கி
வழியெல்லாம் ஊனமாக்கி உனையே வணிகமாக்கி
சாதித்துவிட்டதாய் பெருமை பூத்தோம் -
பாவங்கள்கூட மட மானுடர்க்குச் சுமக்கலாம்
அழுகிய சடலங்களை உன் பொன்மேனியினில்
அனுமதிப்பது எப்படித் தகும் சொல்வாய் ?
பொங்கிக் கரை மீறிக் கடவுளுக்கே அடுக்காத
பொய்மைப் போக்குகளை விழுங்கிவிடு -
மறுபடி தலை எடுக்காதபடி அழித்துவிடு .
------சந்திர கலாதர்

Wednesday, March 21, 2012

இத்தனை மலர்கள் பார்க்கிறேன்

பெயர்கள் சிலதே தெரிகிறேன் -

அவமானமாய்ச் சிறுக்கிறேன் ;

எத்தனை மரங்கள் கடக்கிறேன்

நான்கைந்தே அறிகிறேன் -

வெட்கித் தலை வெட்டுகிறேன் ;

விண்ணில் முறைக்கும் விண்மீன்கள்

பாட்டில் மலரும் பறவைகள் என

இன்னும் எத்தனை எத்தனையோ

ஒன்றையும் கைப்பிடி அறியாமல்

அகம்பாவத்தில் அலம்புகிறேன் -

எங்கோ ஒருவன்  சிரிக்கின்றான்

எனக்கது மட்டும் கேட்கவில்லை !!


-----சந்திர கலாதர்

Thursday, March 8, 2012

பல எளியோரைப் பார்க்கிறேன்
 
கிராமங்களில் சாலை ஓரங்களில் -
 
தனிச்சிறப்பு இல்லாத வாழ்வில்
 
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி
 
எதிர் நீச்சல் முயற்சி இன்றி
 
கனவுகள் சுமக்காத கண்கள்
 
பெரும் திட்டங்கள் புனையாத போக்கில்
 
ஏதோ ஒரு தொழிலில் இயல்பாய்
 
பரபரப்பில்லா மௌன இயக்கத்தில் --
 
நகரத்தின் ஆசைகள்,சதிகள்.
 
ஓட்டங்கள் ஒட்டாத சிற்றோடையாய் --
 
வாழ்வின் மென்மையான நடனம்
 
வியர்க்காத மன அரங்கில்--
 
சிறுபுல் ஆலமர ஆசைகொள்வதில்லை
 
பசுமைப் பரவலில் நிறை கொள்கிறது --
 
பொறாமை நோய்களும் இல்லை ;
 
பொறுமையின் நிதான மலர்வாய் ;
 
உலகே நீ அழகுறுவது இதனாற் தானோ !
 
 
 
-----சந்திர கலாதர்

Tuesday, March 6, 2012

கிராமத்துக்கு ஓடணும்போலத் தோணுது

ஐயோ ! நகர நெரிசல் கொஞ்சம்கூடத் தாங்கலே !

எல்லா வசதி வாய்ப்பும் சல்லிசாக் கிடைக்குது !

ஆனா உசிருக்கு மட்டும் உத்தரவாதம் இல்லையே -

காட்டாறு போல பஸ் லாரி பறக்குது-

தெரு கடந்திடத்தான் மணிக்கணக்கா ஆகுது -

அப்பக்கூட உயிர் கையில் இல்லையே -

இராப் பகலா இரைச்சல் காதைக் கிழிக்குதே -

பைத்தியந்தான் பிடித்துவிடப் போகுதே !

நீதி நேர்மை எவனும் பார்ப்பது இல்லையே -

வீதியையே விலைபேசி விக்கறான் -

சட்டம் ஒழுங்கு கைகட்டி நிக்குது

பொறுக்கி எல்லாம் சட்டம் செய்ய நுழைஞ்சுட்டான்

பொறுமையைக் காலடியில் மிதிச்சுட்டான்

விடிஞ்சு எழுந்தால் கற்பழிப்பு கொள்ளைதான்

புழுங்கிப் புழுங்கி நெஞ்சே புண்ணாகிப்போச்சுதே !

கிராமத்துக்கு ஓடணும்போலத் தோணுதே

கையக்காலை வீசி அங்கே நடந்திருப்பேன்

ஆசை தீர மூச்சிழுத்து ரசித்திருப்பேன்

கிறுக்கன்போலப் பாடிக்கிட்டுத் திரிந்திருப்பேன் 

வரப்புமேல ஓடியாடிச் சிரித்திருப்பேன்

ஆலமரம் அரச மரம் ஒண்ணுவிடாமல்

அடிபடுத்திருந்தே கனவு கண்டிருப்பேன்  

புளிய மரக் கொழுந்துகளைப்  பறித்திருப்பேன்

தின்றுவிட்டு  முகம் சுளித்திருப்பேன்

பன்னீர் மரம் பக்குவமாய்  உலுக்கி இருப்பேன் 

மலர்ச் சொரிவில் மனம் மலர்ந்திருப்பேன்

பூக்காம்பினிலே நாதஸ்வரம்  கீசி இருப்பேன்  

பனைமரப் பரட்டைத் தலை சிரித்திருப்பேன் 

வீரன்போல நிற்பதாலே நெஞ்சு நிமிர்ந்திருப்பேன்  

கூட்டமில்லாக் கோயிலிலே மனம் கூடி நின்றிருப்பேன் 

நெஞ்சார நிலம் தாழ்ந்து  பணிந்திருப்பேன்   

பறவைகளைக் கண் குளிரப் பார்த்திருப்பேன் 

வெண்ணிலாவின்  வீதியிலே குளித்திருப்பேன் 

அந்திநேர அழகையெல்லாம் குடித்திருப்பேன் 

விண்மீனை விடிய விடியப் பார்த்திருப்பேன்

தென்றல் எனும் தேன் குடித்துத் திரிந்திருப்பேன் 

விழியினில் பசுமை பூசி மகிழ்ந்திருப்பேன் 

வெட்ட வெளி வான் பார்த்துப் படுத்திருப்பேன்

நிம்மதியாய்க் கண்மூடித் துயின்றிருப்பேன்   !



கிராமத்துக்கு நான் போகப் போறேன் ஆஹா !


-----சந்திர கலாதர்

Monday, March 5, 2012

the youth and the old-
o what a contrast in between !
the youth is unapologetically mindful
of every millimeter of its dress
for its match,crease,fitness, and what not,
craning and twisting its neck in front of the mirror
and straining every nerve to put up a decent show
everytime it steps out of the house !
the old cares the least for anything
and moves out shabbily unmindful of stature -
while the youth cares all for looks and joy
the old pines for the health of its soul
visiting whatever that is holy
and dwelling wherever it could smell peace !
while the temples are for the pleasures of youth
they are the holy rivers to cleanse the souls of the old.
the youth sprays the worthless ever with matching hearts
the old broods within itself submerging in the sparks of the past !
the youth, does it care for the future ?
the old tunes its ears to the knocks of death.
the youth dares death at its cave
but the old ,though wishes death,
is terribly afraid of even to listen its distant footfalls!
----s.chandra kalaadhar