இத்தனை மலர்கள் பார்க்கிறேன்
பெயர்கள் சிலதே தெரிகிறேன் -
அவமானமாய்ச் சிறுக்கிறேன் ;
எத்தனை மரங்கள் கடக்கிறேன்
நான்கைந்தே அறிகிறேன் -
வெட்கித் தலை வெட்டுகிறேன் ;
விண்ணில் முறைக்கும் விண்மீன்கள்
பாட்டில் மலரும் பறவைகள் என
இன்னும் எத்தனை எத்தனையோ
ஒன்றையும் கைப்பிடி அறியாமல்
அகம்பாவத்தில் அலம்புகிறேன் -
எங்கோ ஒருவன் சிரிக்கின்றான்
எனக்கது மட்டும் கேட்கவில்லை !!
-----சந்திர கலாதர்

No comments:
Post a Comment