போதும் இந்தப் புழுங்கும் முதுமை
&
வயோதிகம் ஆசைகளை உதிர்க்கிறது -
வாழ்வுக் காற்றில் வலிகளை முனகுகிறது
மொழிகளில் விரக்தி முட்கள் குத்துகின்றன
அனுபவங்கள் மட்டுமே சல்லி வேர்களாய்க் கேட்பாரின்றி -
இன்ப வடிதல்களில் துன்ப வெம்மைகளில்
வற்றிய வண்டல் படுகைகளாய் வயதின் சோர்வு ரேகைகள் -
தாண்டிய கால்கள் தரையை நக்கி நகரும் சப்பிய பாதங்களாய்-
வாழவும் தெரியாமல் தரை இறங்கவும் முடியாத
அந்தர ஆலம் விழுதுகளாய் என்ன வாழ்வு இது ?
பேசவும் முடியாமல் கேட்கவும் தாளாமல்
பார்க்கவும் கூடாமல் அடக்கவும் அடங்காமல் --
போதும் இந்தப் புழுங்கும் முதுமை
தனக்குள் அழுகும் இந்த நிலைமை !
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment