Saturday, November 12, 2011

binding myself with promises

சபதங்களால் என் நரம்புகள் கட்டி ...!



&



சபதங்களால் என் நரம்புகளைக் கட்டிப்போட்டு

சப்தமின்றி தினமும் படுக்கையில் வீழ்கிறேன் -

நாளை முதல் மௌனம் காப்பேன்;

வீணாய் வார்த்தைகளுள் சிக்கி வதைப்படேன்;

அழையாத கருத்துக்களை விழைந்து சொல்லேன்;

என் அருமைகளை இவர்களுக்குப் புரிய வைப்பேன் --

விடிந்தபின் விளைவதோ சொல்லக் கேவலம்

மௌனத்தாலும் மாட்டிக் கொள்கிறேன்

மௌனத்திற்குத்தான் இத்தனை வாய்களோ !

வாய் சிந்தி இருந்தால் கூட ஒரு வலிதான்-

மௌனத்தின் ரணங்களோ இடிகளின் கடிகளாய்--

இன்றும் என்றும் உறுதி மொழிகளால் நரம்பினை இறுக்கி

மஞ்சம் வீழ்ந்து மறுபடி வலிகளில் உளைவேன் !

மாறா இதுவே என் கதை என்பேன் !





--சந்திர கலாதர்

Wednesday, November 9, 2011

what life is this old age ?

போதும் இந்தப் புழுங்கும் முதுமை

&

வயோதிகம் ஆசைகளை உதிர்க்கிறது -

வாழ்வுக் காற்றில் வலிகளை முனகுகிறது

மொழிகளில் விரக்தி முட்கள் குத்துகின்றன

அனுபவங்கள் மட்டுமே சல்லி வேர்களாய்க் கேட்பாரின்றி -

இன்ப வடிதல்களில் துன்ப வெம்மைகளில்

வற்றிய வண்டல் படுகைகளாய் வயதின் சோர்வு ரேகைகள் -

தாண்டிய கால்கள் தரையை நக்கி நகரும் சப்பிய பாதங்களாய்-

வாழவும் தெரியாமல் தரை இறங்கவும் முடியாத

அந்தர ஆலம் விழுதுகளாய் என்ன வாழ்வு இது ?

பேசவும் முடியாமல் கேட்கவும் தாளாமல்

பார்க்கவும் கூடாமல் அடக்கவும் அடங்காமல் --

போதும் இந்தப் புழுங்கும் முதுமை

தனக்குள் அழுகும் இந்த நிலைமை !



---சந்திர கலாதர்

Friday, November 4, 2011

a joyful flowery drizzle

மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது

[ஒரு அனுபவம் ]

&

மழை மலராய் மகிழ்வாய்த் தூவுகிறது

குடை கறுமை எதிர்ப்பை விடைக்கிறது-

ஒரு சிறுமி துள்ளலாய்ச் சிலிர்க்கிறாள்;

மழை அவளோடு இணைந்து ஆனந்திக்கிறது-

குடையின் எட்டு முதுகெலும்புகளில் சரிந்து

எட்டு வாய்களில் என்னைத் திட்டித் தீர்க்கிறது

கால் உடுப்புகளைக் கோபத்தில் கடிக்கிறது;

"முட்டாளே ! உனக்கு வயதாகி விட்டது !" என

என் குடையை என் மண்டையாக்கி குத்துகிறது !

ஒட்டிய உடையும் ஓங்கும் குஷியுமாய்ச் சிறுமி

குடையின் தோல்வியில் ஊறிய ஆப்பமாய் நான் !



------சந்திர கலாதர்

Thursday, November 3, 2011

I WITHER KNOWING NOT THE ANSWER, MOM !

விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !

&

அம்மா கட்டிலில் நாட்பட்ட நோயாளியாக

தொண்ணூறைத் தொட்டுவிட்ட நிலையில் -

எதிரில் மௌனப் பிரதிமையாய் நான்-

என்னுள் பாசப் பிரவாகங்கள் எழுந்து

உதட்டுக் கதவங்களில் மோதி உடைகின்றன-

தாயின் விழி அலைகளைச் சந்திக்கும் திராணி அற்றவனாய் -

எண்ணிலா ஆர்வக் கேள்விகள் கொக்கிகளாய்க் கண்களில் -

பல்லாயிரம் பாச வினவுதல்கள் வரிசையிட்டு விழிகளில் -

தாயால் கேட்கவோ என்னால் விடையிடவோ முடியாத தவிப்புகள் -

எதற்குப் பின் நீ வந்தனை தாயின் முன் தூரங்கள் கரைத்து ?

தாயே ! எதற்கும் என்னிடம் சரியான விடையில்லையே என் செய்வேன் ?

உன் மௌனம் முகிழ்க்கின்ற வினாக்கள் அனைத்தும்

என் நலமே சார்ந்தவை என்று அறியாதவனா நான் ?

மகனின் தயக்கங்கள் அறியாத தாயும் அல்லவே நீயும் !

உன் முன் பொய் சொல்லத் திராணியில்லை என்பதால் மௌனம் காக்கிறேன் -

அம்மா ,இம் மௌனக் கரைதலில் கண்களின் கசிவில்

எத்தனையோ சேதிப் பரிமாற்றங்கள் ! பாத வீழ்தல்கள்-

ஆசி இறக்கங்கள் ! அன்புத் தழுவல்கள் !மன்னிப்பு மகிமைகள் !

எந்தத் தகுதியில் நான் உன்னுள் ஜனித்தேன் ?

விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !



------சந்திர கலாதர்

Wednesday, November 2, 2011

i exist amidst a thick overgrowth of luxury

i exist amidst a thick overgrowth of luxury



&



i exist amidst a thick overgrowth of luxury

and a dense undergrowth of affluence-

i can touch,feel and gape in wonder

but i have no rights at all to enjoyment-

yes,i am a slave girl born to toil and clean;

showered in abuses and punishment

with restless bones and sleepless eyes-

my dreams too scare me to death-

and in the palatial houses with hundred doors

i have no gates open for me to breathe my free air-

i could feel the stench of prosperity and gold

suffocating me to death and hell-

o how i wish to cry my heart out to a real dear soul-

god, grant me the penniless life of a poor

to kiss the dust of my distant earth

shouting my joy of a carefree pastoral bliss !

-----s.chandra kalaadhar