Thursday, December 29, 2011

the rain reads its book in dull low monotone

the rain reads its book in dull low monotone...
&
the rain reads its book
in dull low monotone
throughout the day
like a devoted school-boy-
it doesn't look like a storm as predicted
except for rough winds without fury -
the arrogance of a rogue storm
is totally absent-
or does it weep over
a denial of its dear demand by nature ?
who can read the sorrow of a weeping rain ?
is it the murmur of an unwilling task?
the trees also share its grief in sympathy
with strung pearls of tears all over them-
how can i be happy amidst this melancholy
but to weave verses of distress and woe?
-----s.chandra kalaadhar

Saturday, December 10, 2011

ஏன் இந்தப் பொய் ?
 
&
 
"எப்போதும் ஒன் நினைவுதாம்மா !"--
 
ஏன் இந்தப் பொய்?
 
அதுவும் இந்த நகர நகரா வாழ்வில் ?
 
காக்கா கரையும் முன்பே
 
காது புண்ணாகும் சாலைக் கரைச்சல்கள் -
 
உருப்படாத வேலைக்கெல்லாம்
 
ஊர் முழுக்க அலைச்சல்கள் -
 
புழுதியில் தலை சிலுப்பி
 
பள்ளத்துள் புரண்டு பொடிந்து
 
சப்தத்துள் நொந்து செத்து
 
சாபங்கள் எரிந்து கொட்டி
 
நாட்களை வீணுக்குள் வீழ்த்திவிட்டு
 
இரவினைக் கவலை கடித்துத் குதறும்
 
இந்த அன்றாட வாழ்க்கையிலே
 
நம் பெயரும் நமக்கே மறக்கும் அவலத்தில்
 
"எப்போதும் உன் நினைவுதாம்மா !"--
 
ஏன் இந்தப் பொய்க் கூற்று, ஓ மானுடா ?
 
 
------சந்திர கலாதர்

Monday, December 5, 2011

வயதாகிப்போனால்
 
&
 
வயதாகிப் போச்சு
 
இதயம் திறக்கத் தயக்கமாகிறது -
 
ரத்த பந்தங்கள் உராய்வு கொள்ளுமோ ?
 
என் எழுத்துக்கள் பாராட்டுப் பெறுகின்றன -
 
ஆனால் பந்தங்கள் மனதில் அவையே
 
எப்படித் தீப்பந்தங்களாக வீழ்கின்றன ?
 
எழுத்துக்கள் ஒருவேளை
 
அவர் விழி நுழைகையில் இடம் மாறி அமர்ந்து
 
எதிரான அர்த்தங்கள் எழுப்புகின்றனவோ?
 
ஸ்படிகமான என் மொழிகளில்
 
பின் எப்படிக் களங்கம் கரைந்து கொள்கிறது ?
 
கட்டுப்பாடுகளில் இறுகிப்போன எனக்கு
 
இவர்கள் நடத்தைகள் அனைத்துமே
 
தறிகெட்டுத் திரிவதாய்
 
வெறி கொண்டு அலைவதாய்
 
எங்கோ மோதிச் சிதறப் போவதாய்--
 
பதட்டமாய் மனம் பின் தொடர்கிறேன்
 
ஆனால் வாய் மூடி மௌனியாய் !
 
ஆம் ,வயோதிகம் வேறென்ன செய்யக்கூடும் ?
 
 
 
-------சந்திர கலாதர்